Categories
சென்னை மாநில செய்திகள்

சத்தியம் வாங்கிக் கொண்ட கணவர்…. கணவனை உயிருடன் புதைத்த மனைவி…. மகள் பரபரப்பு புகார்….!!!

சென்னை பெரும்பாக்கத்தில் தந்தை ஜீவசமாதி அடைந்து விட்டதாக கூறிய தாய் மீது மகன் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். சென்னை பெரும்பாக்கம் கலைஞர் நகர் பகுதி 8வது தெருவில் நாகராஜ்(60) லஷ்மி (45) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் துபாயில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். மகள் தமிழரசி (25) ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நாகராஜ் குறை சொல்லி சாமி ஆடுவார்.

இவருக்கு கடந்த 17ஆம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அப்போது தன் மனைவியிடம் தான் சாகப் போவதாகவும், தன்னை கொல்லைப்புறத்தில் உள்ள குழியில் ஜீவ சமாதியாக புதைத்து விடுமாறு கூறி கொல்லைப் புறத்தில் இருந்த குழியில் அமர்ந்துகொண்டு மனைவியிடம் சத்தியம் வாங்கிக் கொண்டதால் குழிக்குள் மண்ணைப் போட்டு மூடியுள்ளார்.

அதன் பிறகு வீட்டில் தந்தை இல்லாததால் சந்தேகமடைந்த மகள் தமிழரசி, தந்தை எங்கே என்ற தனது தாயிடம் கேட்டுள்ளார். தந்தை ஜீவசமாதியடைந்ததை தாய் கூறியுள்ளார். பிறர் இந்த சம்பவம் பற்றி தமிழரசி உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமியிடம் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |