மதிமுகவின் பொதுச் செயலாளரான வைகோ தனது மகன் துரை வைகோவை அரசியலில் ஈடுபடுத்தாமல் தள்ளி வைத்திருந்தார். ஆனால் மகன் துரை வைகோவிற்கு அரசியலில் ஈடுபடும் விருப்பம் இருந்ததால் கட்சி பணிகளை மறைமுகமாக செய்து வந்தார். தற்போது வைகோவிற்கு வயதாகி விட்ட காரணத்தினாலும், முன்புபோல் சுறுசுறுப்பாகவும் ஆவேசமாக பேச முடியாத சூழல் உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கட்சிக்கு தொடர்ந்து ஆதரவு சேகரிக்கும் வகையில் துறை வைகோவுக்கு முக்கிய பொறுப்பு அளிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். அதேசமயம் அதிமுகவில் வாரிசு அரசியல் என்கிற பேச்சு எள்ளளவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக கட்சிக்குள் வாக்கெடுப்பு நடத்தினார். இதில் துறை வைகோவிற்கு வெற்றியே கிடைத்தது.
துரை வைகோ எடுத்த முடிவை கோவை ஈஸ்வரன் உள்ளிட்ட பலருக்கும் பிடிக்காத காரணத்தினால் அவர் கட்சியை விட்டுச் சென்றுவிட்டார். ஆனால் வைகோவின் செயலுக்கு தமிழகம் முழுவதும் இருக்கும் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதிமுகவில் துரைமுருகனுக்கு கழக செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது .வைகோ எடுத்த முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் மதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப அணியின் பொறுப்பாளர் பொறுப்பையும் கூடுதலாக தலைமைக் கழகச் செயலாளர் கவனிப்பார் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் துரை வைகோவுக்கு இளைஞரணி பொறுப்பு கூடுதலாக வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. புதிய அறிவிப்பு மூலம்மகன் துரை வைகோ கையில் மதிமுகவை ஒப்படைத்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார் வைகோ. வைகோ சத்தமே இல்லாமல் சாதித்துக் காட்டிய வைகோவின் செயலுக்கு கட்சியிலும் குடும்பத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.