Categories
மாநில செய்திகள்

சதுரகிரி பக்தர்களே!!… இன்று (மார்ச்.15) முதல் 4 நாட்களுக்கு அனுமதி…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!!

பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்வதற்கு இன்று (மார்ச் 15) முதல் 18ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் மாதந்தோறும் பக்தர்கள் வருகை புரிகின்றனர். இதனிடையில் இந்த கோயிலுக்குச் செல்ல மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

அந்த வகையில் இம்மாதம் பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு இன்று (மார்ச் 15) முதல் 18-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சதுரகிரி மலையேற அனுமதி வழங்கப்படுகிறது. ஆகவே பக்தர்கள் காலை 7 -பகல் 11 மணிவரை மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள். பிரதோஷம், பவுர்ணமியன்று சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறவுள்ளது. இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. இதில் பக்தர்கள் தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |