Categories
மாநில செய்திகள்

சதுரகிரி கோயில் செல்ல… பக்தர்களுக்கு அனுமதி…!!!

சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக கொரோனா பொது முடக்கம் காரணமாக இரண்டு மாதங்களாக கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் இன்று முதல் 10-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். இரவு கோயில்களில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளது.

Categories

Tech |