கேப்டன் பதவியில் இருந்து நீக்கி, மீண்டும் தோனியை கேப்டனாக நியமித்ததாலேயேஅதிருப்தியடைந்த ஜடேஜா இந்த ஐபிஎல் சீசன் இல் இருந்து விலகினார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பெரும் குழப்பங்கள் நீடித்து வருகின்றன. ஜடேஜாவின் கேப்டன்சி மாற்றத்தால் அவர் அணியில் இருந்து விலகுவதாக கூறப்பட்டது. அவர் கேப்டன்சி பதவியிலிருந்து விலக அவருக்கு ஏற்பட்ட காயம் தான் காரணம் என கூறப்பட்டது. அதன் பிறகு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இது குறித்து அவ்வப்போது பல்வேறு தகவல்கள் கசிந்து வரும் நிலையில், கேப்டன் பதவியில் இருந்து நீக்கி மீண்டும் டோனியை கேப்டனாக நியமித்ததால் அதிருப்தி அடைந்த ஜடேஜா ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் கூறியுள்ளார். சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் இந்த திடீர் செயல் ஜடேஜாவை கடுமையாக காயப்படுத்தியது என்று கூறிய அவர், சிஎஸ்கே விலிருந்து ஜடேஜா முற்றிலுமாக விலகுவாரா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.