Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சண்டை போட்டு கொண்ட நாய்கள்…. என்ஜினியர் மீது தாக்குதல்…. போலீஸ் நடவடிக்கை…!!

என்ஜினியரை தாக்கிய குற்றத்திற்காக 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டையில் காசிவிசுவநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஸ்வம் என்ற மகன் உள்ளார். இவர் பெங்களூரில் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் உடையார் என்பவர் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் நாயை நடைபயிற்சிக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது விஸ்வம் வீட்டில் இருந்த நாய் உடையாரின் நாயைப் பார்த்து குரைத்து சண்டை போட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த உடையார் தனது நண்பர்களான இசக்கி பாண்டி, முத்துப்பாண்டி ஆகியோருடன் விஸ்வத்தின் வீட்டிற்குள் சென்று தகராறு செய்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் காயமடைந்த விஸ்வம் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உடையார் உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |