Categories
மாநில செய்திகள்

சண்டை நடந்தால் தானே சமாதானம் செய்வதற்கு?… நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்…. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பேச்சு…!!!

கட்சியின் விதிமுறைகள் அனைத்தும் அனைவருக்கும் கட்டாயம் தெரியும்,கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக்கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சிவாஜி கணேசனின் 93 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.அவரின் பிறந்த நாளையொட்டி அமைச்சர் ஜெயக்குமார் அவருக்கு மரியாதை செலுத்தினார். அதுமட்டுமன்றி சிவாஜி கணேசனின் ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’ போன்ற பாடல்களை பாடினார். மேலும் சிவாஜி கணேசன் ஒரு புது வரலாறு.அவர் பல கதாபாத்திரங்களை நம் கண்முன் கொண்டு வந்து எழுதியவர் என்று அவரை நினைவுகூர்ந்து பேசினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,”திண்டுக்கல் சீனிவாசன் அவர்களுக்கு கட்சியின் அனைத்து விதிகளும் நன்றாக தெரியும். அதன்படி அவர் தகுந்த முறையில் பேசவேண்டும். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்ற கட்சியினர் ஒருபோதும் அழைத்து பேசவில்லை.

அவர் தனது சொந்த கட்சியினருடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தினார். முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தனித்தனியாக ஆலோசனை நடத்துவது எந்த வித தவறும் கிடையாது. செயற்குழுவில் கருத்து வேறுபாடு வரலாம். ஆனால் அதனை வெளியில் கூறுவது தவறு. அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை வருகின்ற அக்டோபர் 7 ஆம் தேதி வரும். ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே, வேற்றுமையை வளர்ப்பதால் ஏ விளையும் தீமையே. சண்டை நடந்தால் தானே சமாதானம் செய்வதற்கு? கட்சியின் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கின்றோம்”என்று அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |