சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள வழிமறிச்சான் ஊருணி அருகே 3 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையறிந்த பார்த்திபனூர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை பிடித்து விசாரித்துள்ளனர்.
அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த கருப்பையா(63), ஜெயபால்(27), நாகசாமி(22) என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் சூதாட்டத்தில் பயன்படுத்திய பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.