காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் காவல்நிலையத்தில் முதல் நிலை காவலராக கண்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் சென்றுள்ளது. இதனால் கண்ணனை போலீஸ் சூப்பிரண்டு சஸ்பெண்ட் செய்தார்.
இந்நிலையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, கஞ்சா, குட்கா, கடத்தல், சாராயம் காய்ச்சுதல் போன்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு காவலர்கள் துணை போகக்கூடாது எனவும், இதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்துள்ளார். மேலும் இவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.