Categories
மாநில செய்திகள்

சட்ட விரோதமான மணல் குவாரி வழக்கு…. என்ன நடந்தது?…. அபராதத்துடன் மனு தள்ளுபடி…. கோர்ட் அதிரடி….!!!

நாகப்பட்டினம் மாவட்டம் பெருங்கடம்பனூர் கிராமத்தில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகப்பட்டினம் மாவட்ட பெருங்கடம்பனூர், இளம் கடம்பனூர் மற்றும் சிரங்குடி புலியூர் ஐயர் கிராமங்களில் நடக்கும் சட்ட விரோதமான மணல் கொள்ளைகளை தடுத்து நிறுத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத் சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு பிளீடர் ஆஜராகி அந்த பகுதியில் செயல்படும் மணல் குவாரிகள் அனைத்து உரிமம் பெற்று செயல்பட்டு வருவதாக அறிக்கை தாக்கல் செய்தது. அதுமட்டுமில்லாமல் மணல் குவாரிகளை குத்தகைக்கு எடுத்தவர்களை மிரட்டக்கூடிய வகையில் மனுதாரர் தவறான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் மனுதாரருக்கு எதிராக சட்டவிரதமாக மணல் குவாரி நடத்தியது உள்ளிட்ட குற்ற வழக்குகள் உள்ளது. எனவே இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் மனுதாரர் தரப்பில், தன்மீது பொய்யான குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது. அதனைத்தொடர்ந்து இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், மணல் குவாரிகள் அனைத்தும் முறையான உரிமம் பெற்று செயல்படுகிறது என்றும், சட்ட விரோதமாக எந்த குவாரிகளும் செயல்படவில்லை என்றும் அரசு தரப்பில் தாக்கல் செய்த அறிக்கைகளில் இருந்து தெரியவந்துள்ளது. எனவே முறையாக விசாரிக்காமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி மனுவை ரூ.50,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார். மேலும் இந்த அபதார தொகையை 15 நாட்களுக்குள் மாநில சட்ட பணிகள் ஆணைக்குழுவில் செலுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்

Categories

Tech |