சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே ஒலையனுர் பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையிலான ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர்.
அந்த விசாரணையில் ஒலையனுர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பதும், ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருவதும் தெரியவந்தது. இவர் 300 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தார். இதை கவனித்த காவல்துறையினர் கஞ்சாவை பறிமுதல் செய்து தமிழ்ச்செல்வனை கைது செய்தனர்.