சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராப்பாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையில் ஒரு குழு வடக்கனந்தல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மதன் குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேப்போன்று திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சரவணம்பாக்கம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வாலிபர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இருசன் என்பது தெரியவந்தது.