சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கபிரியேல் தலைமையிலான ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது கண்டநாயக்கன்பட்டியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை விசாரணை செய்துள்ளனர்.
அந்த விசாரணையில் தண்டநாயகன் பட்டியைச் சேர்ந்த அந்தோணி என்பதும், அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 4,000 ரொக்கப் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதன் பிறகு அந்தோணியை கைது செய்து குழித்துறை சிறையில் அடைத்தனர்.