கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் சந்தை பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பையுடன் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது பையில் 2 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஷாபான் அதீஸ்(23) என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் வாலிபரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.