Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சட்ட விதிமுறைகளை மீறி விற்பனை செய்யப்பட்ட சிகரெட் லைட்டர்கள்’…. கடைகளின் உரிமையாளர்களுக்கு 25,000 ரூபாய் அபராதம்….!!!!!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்  விற்பனை செய்த ஐந்து கடை உரிமையாளர்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொழிலாளர் முதன்மை செயலாளர் ஆணையர் மற்றும் சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி உள்ளிட்டோரின் ஆணையின்படி அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்ட பொழுது சட்டமுறை எடையளவு மற்றும் பொட்டலப்பொருட்கள் விதிகளின் கீழ் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட் லைட்டர்களில் சட்டமுறை எடையளவுகள் விதிகளை மீறுவதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் சோதனை செய்யப்பட்டது. இதில் இச்சட்டத்தின்படி முரண்பாடுகள் காணப்பட்ட ஐந்து கடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தலா ரூபாய் 5000 வீதம் 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

 

Categories

Tech |