Categories
மாநில செய்திகள்

சட்ட முன்வடிவை திருப்பி அனுப்பியது சரியல்ல…. அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!!

சென்னை, தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் அடிப்படையில் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் நீட் விலக்கு கோரும் மசோதாவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைக்கிறார்.

இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, நீட் விலக்கு சட்ட முன் வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியது அரசியலமைப்பு முறைப்படி சரியானது அல்ல. நீட் தேர்வு தொடர்பாக ஆளுநரின் மதிப்பீடுகள் முற்றிலும் தவறானது. ஆளுநரின் கருத்து உயர்மட்ட குழுவை அவமதிப்பது போல் இருக்கிறது என்று கூறினார்.

Categories

Tech |