Categories
மாநில செய்திகள்

சட்ட ஒழுங்கு பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு?…. அதிமுகவை விளாசி தள்ளிய முதல்வர் ஸ்டாலின்…!!!!

சட்டம் ஒழுங்கு பற்றி பேசுவதற்கு அதிமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை என முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசினார். அதில் அவர் கூறியதாவது, ‘திமுக ஆட்சிக்கு வந்தபிறகே ரவுடிகளை ஒடுக்கி, கூலிப்படைகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.திமுகவை சார்ந்தவர்களே தவறு செய்தாலும், ஏன் சிறிய குற்றம் இழைத்தாலும் அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அண்ணா, கலைஞர் மீது ஆணையாகச் சொல்கிறேன். தமிழகத்தில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சி எனக் கூறினார். மேலும்
அந்த வழக்கு பாயுமோ இந்த வழக்கு பாயுமோ என்று பயந்து நடுங்குகிறவர்களுக்கு எல்லாம் பாதுகாப்பு தர முடியாது.

பதுங்கும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், இந்த அரசு பாய்ந்து பிடிக்கும். அப்படி பதுங்கிய ஒருவரும் கடந்த 5 ஆம் தேதி கைது செய்யப்பட்டுவிட்டார். என ராஜேந்திர பாலாஜியின் கைது குறித்து முதல்வர் இலைமறை காயாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,
காவல்துறையை ஏவல்துறையாக மாற்றிவிட்டதாக எதிர்க்கட்சத் தலைவர் கூறினார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தமிழக மக்கள் யாரும் இன்னும் மறக்கவில்லை எனக் கூறினார். கொடநாடு கொலை முதல் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, குட்கா வழக்கு வரை முத்திரையை பதித்தவர்கள் அதிமுகவினர் தான் அவர்களுக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது.”என ஸ்டாலின் கூறினார்.

Categories

Tech |