மராட்டியத்தின் நாசிக்நகர் அருகில் லஹாவிட் மற்றும் தேவ்லாலி இடையில் சென்று கொண்டிருந்த 11061 என்ற எண் கொண்ட எல்.டி.டி-ஜெய்நகர் செல்லும் பவன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை 15.10 மணியளவில் திடீரென்று தடம் புரண்டது. இதில் யிலில் இருந்த சில பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து புரண்டது. இதையடுத்து சம்பவபகுதிக்கு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடோடி சென்றனர். மேலும் ரயில்வே நிர்வாகத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பின் விபத்து நிவாரண ரயில் மற்றும் மருத்துவ வேன் போன்றவை சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து சென்றன. இந்த ரயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து உடனே தெரியவரவில்லை.
அதனை தொடர்ந்து ரயில் பயணிகளுக்காக பேருந்துகளை ரயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து மத்திய ரயில்வே நிர்வாகத்தின் தலைமை பி.ஆர்.ஓ. கூறியபோது, பவன் எக்ஸ்பிரசின் சில பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டது. எனினும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதனிடையில் தம்பதிகளில் ஒரு சில பேருக்கு மட்டும் காயம் ஏற்பட்டது. பின் உதவி எண் அறிவிக்கப்பட்டு மீட்புபணிகள் நடந்துள்ளன என தெரிவித்துள்ளார். பவன் எக்ஸ்பிரஸ் ரயிலின் 11 பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து விலகி சென்றுள்ளது. நிவாரண பணிகளுக்காக ரயில் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்த சம்பவத்தினால் 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளது. அத்துடன் 2 ரயில்கள் காலதாமதத்துடன் இயக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.