சட்ட விரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குமார் என்பவர் வீட்டிற்கு பின்புறம் மது விற்பனை செய்துள்ளார். மேலும் மாரி என்ற பெண் தனது பெட்டி கடையில் மது விற்பனை செய்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் குமார் மற்றும் மாரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.