மாநிலம் முழுவதும் ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் பொருட்களை சட்டவிரோதமாக பதுக்குபவர்கள் மீது வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் சார்பாக தனி குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் சிவகாசி அருகே நாகலாபுரம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அந்த பகுதியில் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த மினி வேன் வாகனத்தை சோதனை செய்துள்ளனர். அதில் சுமார் இரண்டு டன் மதிப்பிலான ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தியதாக வெம்பக்கட்டையைச் சேர்ந்த குமார், ரமேஷ், சந்தனமாரி உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்துள்ளனர். மேலும் இது பற்றி வழக்கு பதிவு செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
Categories
சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தல்… அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார்… 3 பேர் கைது…!!!!!
