கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் ஆமாரம்பல்லம் கிராமத்தில் உள்ள வணிக கட்டிடத்தை இஸ்லாமிய மத வழிபாட்டு தலமாக மாற்ற அனுமதிக்குமாறு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அந்த மனுவை கலெக்டர் அலுவலகம் நிராகரித்துள்ளது. இதனை எதிர்த்து மத வழிபாட்டு தளம் அமைக்க அனுமதிக்கும்படி நூருல் இஸ்லாம் ஷம்ஹரிகா சங்கம் எனும் இஸ்லாமிய அமைப்பு கேரளா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது தொடக்கத்தில் கட்டிடம் வணிக பயன்பாட்டிற்கு கட்டப்பட்டாலும் அதனை ஆய்வு மேற்கொண்ட போது கட்டிடம் இஸ்லாமிய மத வழிபாட்டு தளமாக மாற்றும் விதமாக அமைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் மாவட்ட கலெக்டர் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மனுதாரரின் வணிக கட்டிடத்தை சுற்றியுள்ள 5 கிலோமீட்டர் சுற்றளவில் மொத்தம் 36 இஸ்லாமிய மத வழிபாட்டுத்தலங்கள் இருக்கிறது என கூறப்பட்டுள்ளது. தற்போது அமைக்கப்பட இருக்கின்ற இஸ்லாமிய மத வழிபாட்டு தளம் இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தினர் பெரும்பான்மையில் வசிக்கும் பகுதியாகும். இதனால் வணிக கட்டிடத்தில் மத வழிபாட்டு தளம் அமைக்க அனுமதிப்பது மத ரீதியிலான மோதலுக்கு வழிவகுக்கும் என கூறப்பட்டிருக்கிறது. மேலும் அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்டு நீதிபதி வணிக கட்டிடத்தை இஸ்லாமிய மத வழிபாட்டுத்தலமாக மாற்றுவதற்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டிருக்கிறார். இந்த நிலையில் மாநிலத்தில் சட்டவிரோதமாக அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் மத வழிபாட்டு தலங்கள் மத வழிபாட்டுக்கூடங்கள் அனைத்தையும் மூட மாநில அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.