தமிழக சட்டசபை தேர்தலில் தனது பங்கு கட்டாயம் இருக்குமென மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எனது பங்கு கட்டாயம் இருக்குமென மு.க.அழகிரி சூளுரைத்துள்ளார். மேலும் புதிய கட்சி தொடர்பாக, போகப்போகத்தான் தெரியும் என அவர் கூறியுள்ளார்.
தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்த பிறகுதான் எந்த முடிவையும் நான் எடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் தான் பாஜகவில் இணைவதாக வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல் வதந்தி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.