Categories
மாநில செய்திகள்

சட்டமன்ற குழு தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு… நாளை ஆளுநருடன் சந்திப்பு..!!

திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக மு க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அதில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்க உள்ளது. இதை அடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக மு க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக இந்த கூட்டத்தில் பங்கேற்க திமுக எம்எல்ஏ மட்டுமல்லாது கூட்டணி கட்சி எம்எல்ஏக்களும் அழைப்பு விடுத்திருந்தனர். இதையடுத்து நாளை மாலை 6.30 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மு க ஸ்டாலின் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |