உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு ஜனவரி மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் பஞ்சாபை பொறுத்தவரையிலும் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. அதாவது கௌரவமான வெற்றியை பெற வேண்டும் என்ற நிலையில் பாஜக பயணித்தது.
கடந்த முறை எதிர்க்கட்சியாக அமர்ந்த ஆம் ஆத்மி இந்த முறை ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக களப் பணியாற்றியது. அந்த கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக பகவந்த் மான் அறிவிக்கப்பட்டார். இவர் ஒரு நகைச்சுவையான நடிகர் ஆவார்.
இந்நிலையில் பஞ்சாபில் அமோக வெற்றியை நோக்கிய முன்னிலை நிலவரம் ஆம் ஆத்மி கட்சியினரை மகிழ்ச்சி திளைப்பில் ஆழ்த்தியுள்ளது. அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த் மான், அரசு அலுவலகங்களில் இனி முதலமைச்சரின் புகைப்படம் இருக்காது என தெரிவித்துள்ளார். தங்கள் தலைவர்களது படங்களை வைப்பதற்கு சிலர் களேபரம் நிகழ்த்தியதை நினைக்கையில் இவரின் அறிவிப்பு முன்மாதிரியாக இருக்கிறது.