சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் பிஏ. எல்எல்பி, பிபிஏ. எல்எல்பி, பிகாம். எல்எல்பி, பிசிஏ. எல்எல்பி ஆகிய 5 ஆண்டு இளங்கலை ஆனர்ஸ் சட்டப் படிப்புகளும், அதேபோல், அரசு சட்டக் கல்லூரிகளில் பிஏ. எல்எல்பி 5 ஆண்டு சட்டப் படிப்பும் வழங்கப்படுகின்றன. இப்படிப்புகளில் நடப்பு கல்வி ஆண்டில் (2022-23) சேர ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அதன்படி சட்டப்படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று(ஜூலை 12) முதல் தொடங்குகிறது. 5 ஆண்டு சட்டப் படிப்பில் சேர விரும்புபவர்கள் www.tndalu.ac.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் ஜூலை 29ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.