Categories
மாநில செய்திகள்

சட்டத்தை மீறாதிங்க…. நடவடிக்கை எடுக்கப்படும்…. பாஜகவை எச்சரிக்கும் அமைச்சர்…!!

சட்டத்தை மீறி வேல் யாத்திரை நடத்தினால் அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓட்டேரியில் வைத்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பாஜக நடத்த நினைக்கும் வேல் யாத்திரை போன்ற ஊர்வலங்கள் மூலம் அதிக மக்களுக்கு தொற்று பரவும். கொரோனாவின் 2வது பி அலை, 3வது அலை போன்றவை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மக்களின் நலனை பாதுகாக்க வேண்டியது அரசின் முழு பொறுப்பு. பொருளாதாரத்தை மேம்படுத்த தான் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனை கருத்தில் கொண்டு பாஜக வேல் யாத்திரையை கைவிட வேண்டும்.

சட்டத்தை மீறி செயல்பட்டால் நிச்சயமாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதியாக கூறியுள்ளார். நாளை முதல் ஒரு மாத காலத்திற்கு பாஜக சார்பாக வெற்றிவேல் யாத்திரை நடத்தப்பட இருந்தது.

ஆனால் இந்த யாத்திரை நடத்துவதற்கு பல அரசியல் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தன. அதோடு பொதுநல வழக்கும் தொடரப்பட்டது. வழக்கின் விசாரணையில் அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு விளக்கம் விளக்கம் அளித்து திட்டவட்டமாக கூறியதால் அனைத்து பொதுநல வழக்குகளை முடித்து வைக்கப்பட்டன.

Categories

Tech |