நெல்லையில் மது விற்பனை செய்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த நவீன யுகத்தில் அனைத்து பகுதிகளிலும் சில நபர்கள் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க காவல்துறையினர் சிலவிதமான நடவடிக்கைகளை எடுத்தும் கூட இன்றளவும் சிலர் சட்டத்திற்குப் புறம்பான செயல்களை செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் சீலாத்திகுளத்தில் சந்தன குமார் என்பவரும், முத்துக்கிருஷ்ணன் என்பவரும் வசித்து வருகிறார்கள்.
மேலும் முடவன்குளத்தில் இசக்கி ராஜா என்ற நபரும் வசித்து வருகிறார். இந்த 3 வாலிபர்களும் டாஸ்மாக்கில் மது பாட்டிலை வாங்கி அதனை கூடுதல் விலைக்கு வெளியே விற்பனை செய்துள்ளனர். இதனை அவ்வழியாக ரோந்து சென்ற காவல்துறையினர் கண்டுபிடித்து 3 நபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.