Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சட்டசபை தேர்தல்” பாதுகாப்புக்கு நாங்க இருக்கிறோம்…. கொடி அணிவகுப்பு நடத்திய துணை ராணுவத்தினர்….!!

முக்கூடலில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தவிர்க்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க துணை ராணுவ படையினர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் துணை ராணுவ படையினர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், தேர்தலை முன்னிட்டு அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்கவும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகவும் கொடி அணிவகுப்பு நடத்தினர்.அந்த வகையில் நேற்று முக்கூடலில் காவல்துறை துணை ஆய்வாளர் கோகிலா மற்றும் காவல்துறை ஆய்வாளர்  காவூராஜன் தலைமையில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர் மேலும் இந்த அணிவகுப்பானது முக்கூடல் புது பேருந்து நிலையம் வழியாக அரியநாயகிப்புரத்தை சுற்றி முக்கூடல் – ஆலங்குளம் சாலையில் நிறைவு பெற்றது .

Categories

Tech |