சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சட்டமன்ற நூற்றாண்டு விழாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழா மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இன்று திறப்பு விழா நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார். அதுமட்டுமில்லாமல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியின் உருவப்படத்தை அவர் திறந்து வைத்தார்.
மு கருணாநிதி அவர்கள் ஐந்து முறை முதல்வராகவும், 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரின் திருவுருவப் படத்திற்கு கீழே “காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மு கருணாநிதி அவர்களின் திருவுருவப் படத்தை திறந்து வைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.