Categories
தேசிய செய்திகள்

சட்டசபைக்கு சைக்கிளில் சென்ற எம்.எல்.ஏ…. அதிர்ச்சியில் கேரளா மக்கள்….!!

கேரளாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மற்றும் அதன் மீது விதிக்கும் வரியை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்திற்கு ஆதரவாக கோவளம் சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வின்சென்ட் சட்டசபைக்கு சைக்கிளை செல்ல முடிவெடுத்தார். இதையடுத்து காலையில் நண்பருடன் சைக்கிளை வாங்கி எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் இருந்து சைக்கிளில் சட்டசபைக்கு வந்த அவரை காங்கிரஸ் கட்சியினர் வரவேற்றனர்.

அதன்பிறகு அங்கிருந்து எம்.எல்.ஏ.க்கள் விடுதிக்கு அவர் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். மேலும் எம்.எல்.ஏ. சைக்கிளில் வந்ததை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இது குறித்து எம்.எல்.ஏ வின்சென்ட் கூறியது, நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு வலிமை சேர்க்க கூடிய வகையில் சைக்கிளில் சட்டசபைக்கு சென்றேன் என்று கூறினார்.

Categories

Tech |