Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட நர்ஸ்….. வாலிபரின் கொடூர செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

நர்சை அடித்து கொலை செய்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு பகுதியில் சுப்புலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 2-ஆம் தேதி வீட்டு கழிப்பறையில் ரத்த காயங்களுடன் சுப்புலட்சுமி சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொடுக்கல்-வாங்கல் பிரச்சனையில் சுப்புலட்சுமி அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் கீழஅச்சனம்பட்டியில் வசிக்கும் விவசாயியான ஜெகதீஸ்வரன் என்பவரை கைது செய்து விசாரித்துள்ளனர்.

அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது ஜெகதீஸ்வரனின் தந்தையான முருகன் என்பவர் சுப்புலட்சுமியிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். இதனையடுத்து விவசாயத்தின் மூலம் கிடைத்த வருமானத்தின் பெரும்பகுதி பணத்தை முருகன் சுப்புலட்சுமிக்கு வட்டியாக கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசுவதற்காக ஜெகதீஸ்வரன் சுப்புலட்சுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த ஜெகதீஸ்வரன் சுப்புலட்சுமியை உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் தாக்கி கொலை செய்தது தெரியவந்துள்ளது.

Categories

Tech |