Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சஜத் தன் மகளை கொலை செய்துவிட்டு நாடகமாடுகிறார்”… இறந்த சஹானாவின் அம்மா…!!!!!

கணவருடன் சஹானா தனிக்குடித்தனம் சென்ற நான்கு மாதத்திலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சஹானா. இவர் சிறு சிறு வேடங்களிலும் மாடலாகவும் வலம் வந்தார். இந்நிலையில் சஹானா 22-வது பிறந்த நாளை மே 12 ஆம் தேதி கொண்டாடியுள்ளார். பிறந்தநாளை கொண்டாடிய இரவே உயிரிழந்ததாக செய்தி வெளியானதையடுத்து அவர் கணவர் சஹானா தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். மேலும் சஹானா ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கியபடி உடலை பார்த்ததாகவும் கூறினார்.

இதையடுத்து போலீஸார் சஹானாவின் உடலை கைப்பற்றி தற்கொலைக்கான அடையாளங்கள் எதுவும் இல்லாததால் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர். இதையடுத்து கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்படும் என கூறப்படுவதால் கணவரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்து வருகின்றார்கள்.

சஜத்தியின் அம்மா பத்திரிகை நிருபர்களிடம் கூறியுள்ளதாவது, சென்ற ஜனவரி 25ஆம் தேதி தனிக்குடித்தனம் சென்றதிலிருந்து சஹானாவுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர் என் செல்போன் நம்பரை பிளாக் செய்து விட்டார். அதன் பிறகு என் மகனையே இரண்டு முறை தான் சந்தித்தேன். திருமணமான ஒரு வாரத்திலேயே அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. எங்களுடன் சஹானாவால் அட்ஜஸ்ட் செய்ய முடியவில்லை. ஒருமுறைச் சஜத்துடன் சண்டை போட்டப்ப சஹானா கத்தியுடன் நின்றதை பார்த்திருக்கின்றேன்.

இதைத் தொடர்ந்து நீங்கள் என் வீட்டில் தங்க முடியாது, நான் சிறைக்குசெல்ல விரும்பவில்லை என என் மகனிடம் கூறி தனிக்குடித்தனம் செல்லுமாறு நான் தான் கூறினேன். 25 சவரன் நகை எல்லாம் சஹானாவிற்கு போடவில்லை. என் மகன் தப்பு செய்திருந்தால் அவன் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் சஹானாவின் மரணத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர்களுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தது என கூறியிருந்தார்.

இந்நிலையில் சஹானாவின் அம்மா உமைபன் சஜத் தன் மகளை கொலை செய்துவிட்டு நாடகம் ஆடுவதாக கூறியுள்ளார். மேலும் சஹானாவை தனிக்குடித்தனம் செல்லுமாறு கூறியது நான் தான். மாமியார், நாத்தனார், கணவர் உள்ளிட்டோர் சகஹானாவை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறியுள்ளார்.

Categories

Tech |