Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவுடன் இணைப்பு ? சசிகலா தமிழகம் வரட்டும் தெரியும்…! பாஜக தலைவர் பதில் …!!

சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா பெங்களுருவில் ஓய்வு எடுத்து வருகின்றகிறார். அவரை அதிமுகவில் இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்தான கேள்விக்கு தமிழக பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன் கூறுகையில், சசிகலாவின் வருகை எப்படி இருக்கும் என்பதை அவர்கள் தமிழ்நாட்டுக்கு வரும்போது நமக்கு தெரியும். சசிகலாவை அதிமுகவில் இணைக்கும் முயற்சியில் நாங்கள் எடுபடவில்லை என தெரிவித்தார்.

மேலும், இந்த பட்ஜெட் அருமையான பட்ஜெட், வளர்ச்சியை நோக்கிய பட்ஜெட், தேசத்தின் வளர்ச்சி,  தனி மனிதனின் வளர்ச்சி, விவசாயிகளின் வளர்ச்சி, பட்டியலின மக்கள்  வளர்ச்சி என அத்தனை பேரின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு, அவர்கள் அனைவருமே வளரவேண்டும் என்பதற்காகத்தான் இந்த பட்ஜெட் கொடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் என்றாலே எல்லாத்துக்குமே எதிர்ப்பு சொல்வதாக இருக்ககூடாது. நல்ல விஷயங்களை வரவேற்கக் கூடிய மனப்பக்குவம் இருக்கணும். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியினுடைய மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து மக்களிடம் கொண்டு செல்வோம்.

திமுக தலைவர் மு க ஸ்டாலினால் ஒரு குறையையும் தீர்க்கமுடியாது. 39 எம்பிக்கள் இன்று இருக்கிறார்கள் எந்த குறையை தீர்த்தார்கள். எத்தனை முறை அவர்கள் மக்களுடைய குறைதீர்க்கும் நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். எம்எல்ஏக்கள் 90க்கும் அதிகமாக இருக்கிறார்கள்,  அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வைத்திருக்கிறார்களா ?  என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் குற்றம் சாட்டினார்.

Categories

Tech |