சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகளாக சிறை தண்டனையில் இருந்த இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விடுதலையானார். அதன் பிறகு இவர் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் இறங்கினார். இதில் இவரை சுற்றி சர்ச்சைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. வழக்குகளும் சொத்துக்கள் முடக்கமும் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன. அதன்படி சசிகலாவால் பினாமி பெயரில் வாங்கப்பட்ட சென்னை தி நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயர் பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தின் சொத்துகளை வருமானவரித்துறைநர் முடக்கி விட்டனர். இந்த சொத்தின் மதிப்பு ரூ.15 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்து 2017 ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை செய்தனர்.
இந்த சோதனையின் போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சென்னை கோவை மற்றும் புதுச்சேரியில் உள்ள சொத்துக்களை வருமானத்துறையினர். அதனை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக சசிகலா தரப்பினர் 2003 2005 ஆம் ஆண்டுகளில் வாங்கிய சொத்துக்களை வருமானவரித்துறையினர் முடக்கி விட்டனர். சென்னை போயஸ் கார்டன், தாம்பரம், ஆலந்தூர், ஸ்ரீ பெருந்துரில் உள்ளிட்ட இடங்களில் சொத்துக்களை வருமான வரி துறை முடக்கி விட்டனர். மூன்றாவது கட்டமாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெயரில் சென்னைக்கு அருகில் உள்ள சிறுதாவூர் நிலம் மற்றும் நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் நிலம் என மொத்தம் 1100 ஏக்க நிலங்கள் பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கோடநாடு எஸ்டேட் மதிப்பு ரூ.1500 கோடி மற்றும் சிறுதாவூர் நிலத்தின் மதிப்பு ரூ.500 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கான நோட்ஸ் அந்த சொத்துகளின் வாயில்களில் ஒட்டப்பட்டுள்ளது.