Categories
மாநில செய்திகள்

சசிகலா காரை வழிமறித்த இளைஞர்… செல்பி எடுத்துக் கொண்ட சசிகலா…!!!

சசிகலா சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த வழியில் இளைஞரின் விருப்பத்தை ஏற்று காரை நிறுத்தி செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து விடுதலையானார். ஆனால் அவரின் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் பெங்களூருவில் இருந்து சசிகலா இன்று தமிழகம் வந்து கொண்டிருக்கிறார். சசிகலா புறப்பட்ட காரில் அதிமுக கொடி பறந்தது. இந்நிலையில் ஓசூர் ஜூஜூவாடி அருகே சசிகலா வந்து கொண்டிருந்த காரிலிருந்து அதிமுக கொடி அகற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசாருடன் அதிமுகவினர், சசிகலா ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அதிமுக கொடி அகற்றப்பட்ட நிலையில் வேறு ஒரு காரில் சசிகலா வந்து கொண்டிருக்கிறார்.

இதனையடுத்து சென்னையை நோக்கி சசிகலா வந்துகொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் திடீரென காரை நிறுத்தினார். அப்போது சசிகலாவிடம் செல்ஃபி எடுக்க வேண்டும் என்ற இளைஞர் வேண்டுகோள் விடுத்தார். இளைஞரின் வேண்டுகோளுக்கு இணங்க சசிகலா அந்த இளைஞருடன் செல்பி எடுத்துக்கொண்டார். அதன்பிறகு அங்கிருந்து அவர் புறப்பட்டார்.

Categories

Tech |