சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா மற்றும் அவருடைய உறவினரின் தண்டனை காலம் முடிவடைய உள்ள நிலையில் மூவரும் எப்போது விடுதலை ஆவார்கள் என்பது மக்களிடையே ஒரு பேசுபொருளாக இருக்கிறது. சசிகலா வரும் ஜனவரி 27ஆம் தேதி இரவு ஒன்பது முப்பதுக்கு விடுதலை செய்யப்பட உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
சசிகலா விடுதலைக்கு முன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் பெங்களூர் சிறையிலிருந்து இன்னும் மூன்று நாட்களில் விடுதலையாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்த நிலையில் சசிகலாவை அரசியலில் புதிய புயலைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.