Categories
மாநில செய்திகள்

சசிகலாவை சந்தித்து பேசிய வைத்தியலிங்கம்….. செம ஷாக்கில் எடப்பாடி டீம்….. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

அதிமுகவில் அதிகார போட்டி உச்சத்தை எட்டியுள்ள நிலையில் ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரு அணிகளாக பிரிந்து தாங்கள் தான் உண்மையான அதிமுக எனக் கூறி வருவதோடு, இவர்களது வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் அமர்வில் இருவருக்கும் மாறி மாறி சாதகமான தீர்ப்பு வந்த நிலையில் இரு நபர் நீதிபதிகள் அமர்வு கடைசியாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக ஜூலை 11 ஆம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு மற்றும் இடைக்கால பொதுச் செயலாளர் பதவி செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளதோடு நேற்று காலை 10:30 மணிக்கு அதிமுக அலுவலகத்தில் சென்று ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து மேல்முறையீடு செய்துள்ள ஓ.பன்னீர்செல்வம் நாங்களும் அதிமுக அலுவலகத்திற்கு செல்கிறோம். எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று காவல்துறை பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டது.

ஆனால் நீதிமன்ற பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டால் மட்டுமே நாங்கள் உங்கள் பாதுகாப்பு அளிக்க முடியும் என்று காவல்துறை கையை விரித்து விட்டது. இந்த வழக்கு புகார் ஒரு புறம் சென்று கொண்டிருக்க ஓபிஎஸ் தரப்பு சசிகலா, டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவுக்கு கொண்டு வரும் முனைப்பில் தீவிரம்காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதற்கு எப்படி எல்லாம் முட்டுக்கட்டை போட முடியுமா அந்த வகையில் எடப்பாடி தரப்பு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு வலது கரமாக செயல்படும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் இன்று சசிகலாவை சந்தித்து பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள காவரப்பட்டு கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் சசிகலா வைத்திலிங்க சந்தித்து பேசினார். அப்போது வைத்திலிங்கம் பிறந்தநாள் என்பதால் அவருக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த விவாகாரம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தெரிந்த பிறகு கலக்கமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Categories

Tech |