Categories
மாநில செய்திகள்

சசிகலாவை சந்திக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்… பரபரப்பு செய்தி…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சசிகலாவை சந்திக்க பெங்களூரில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என்று அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும் ராமநாதபுரம் எம்எல்ஏவுமான டாக்டர் மணிகண்டன் சசிகலாவை சந்திக்க பெங்களூரில் முகாமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மணிகண்டன் தனது ஆதரவாளர்கள் சிலர் உடன் இரண்டு நாட்களுக்கு முன்பே பெங்களூர் சென்றுள்ளதாகவும், சசிகலாவை சந்தித்து அணி மாற உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பதவி பறிக்கப்பட்ட ஒரே அமைச்சர் இவர்தான். சசிகலாவுக்கு அதிமுகவில் இருந்து ஆதரவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |