ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னரான அதிமுகவின் சறுக்கல் பல்வேறு கட்சிகளையும் அதிமுகவை ஏலனமாக பார்க்கச் செய்துள்ளது. சட்டமன்ற தேர்தலிலும் சரி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் சரி அதிமுகவுக்கு நேர்ந்த பின்னடைவால் தொண்டர்களுக்கு இரட்டை தலைமை மீதான அதிருப்தியை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கடுமையான பின்னடைவை சந்தித்தது. இது தொண்டர்களுக்கு மத்தியில் சசிகலாவை ஏன் அதிமுகவிற்கு நுழைக்க கூடாது என்ற எண்ணத்தை எழுப்ப தொடங்கியது. இதற்கு பிள்ளையார் சுழியாக அமைந்தது தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தான். அதிமுக நிர்வாகிகள் மட்டுமல்லாது டெல்லியின் எண்ணமும் சசிகலாவை அதிமுகவில் உழைப்பதுதான் என்பது போன்ற அரசல் புரசலான கருத்துக்கள் எடப்பாடி பழனிச்சாமியின் காதுகளுக்கு செல்லவே அது அவரை செம டென்சனாக்கி உள்ளது.
மக்களவை தேர்தலுக்கு முன்னர் சசிகலாவை கட்சிக்குள் கொண்டுவந்து டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை அதிமுகவுடன் இணைப்பதுதான் டெல்லியில் நோக்கம் என சில அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். அவ்வாறு சசிகலா அதிமுகவிற்கு நுழைந்தால் இரட்டை தலைமை காலி செய்யப்படும் என சிலர் கருதுவதாகவும் ஆனால் அவ்வாறு நடக்காது இரட்டை தலைமை சசிகலாவோடு சேர்த்து மூன்று தலைமையாக மாறும் என சிலர் கூறுகின்றனர். எது எப்படியோ இன்னும் குறிப்பிட்ட சில காலத்திற்குள் அதிமுகவில் மாற்றங்கள் நிகழ்வது உறுதி. இந்நிலையில் டெல்லியில் இருந்து கிரீன் சிக்னல் வந்து விட்டதால் சசிகலாவும் தென் மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செல்ல தொடங்கி விட்டார்.
நிலைமை இவ்வாறு இருக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு சசிகலா அதிமுகவிற்கு வருவதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லையாம் எடப்பாடியோடு மட்டுமல்லாமல் தினகரனுக்கும் சசிகலா அதிமுகவிற்கு செல்வதில் நாட்டமில்லை என கூறப்படுகிறது. சசிகலா அதிமுகவிற்கு செல்லாமல் அமமுகவுடன் கைகோர்க்கும் பட்சத்தில் அதிக எண்ணிக்கையிலான தொண்டர்களை ஈர்க்க முடியும் என டிடிவி கருதுகிறாராம். இது எடப்பாடி பழனிச்சாமி மகிழ்ச்சியடையச் செய்து இருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.