Categories
அரசியல்

சசிகலாவுக்கு கேட் ஓபன் ஆயிருச்சு…!! கிரீன் சிக்னல் கொடுக்கும் ஓபிஎஸ்…!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் படுதோல்வி அனைவரையும் பேச வைத்துவிட்டது. அந்தவகையில் இந்த தோல்விக்கு முக்கிய காரணம் சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் சேர்த்துக் கொள்ளாததுதான் எனவும் இந்த பிரிவு இவ்வாறு தொடருமேயானால் எதிர்காலத்தில் நம் நிலைமையும் இவ்வாறுதான் இருக்கும் என சிலர் கட்சி தலைமைக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளனர். இந்நிலையில் தற்போது சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஓபிஎஸ் தலைமையில் தேனியில் உள்ள பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் நடைபெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரனை எவ்வித நிபந்தனையுமின்றி கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என தொண்டர்கள் வலியுறுத்திய நிலையில் தொண்டர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஓ பன்னீர்செல்வம் மிகவும் கவனத்துடன் கேட்டாராம். இது தொடர்பாக வருகிற 5ஆம் தேதி தேனி மாவட்ட அதிமுக சார்பாக கட்சித் தலைமைக்கு அறிவுறுத்த உள்ளதாக ஓபிஎஸ் தரப்பு கூறுகிறது.

Categories

Tech |