அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையில் பிரச்சனை நிலவி வருகிறது. இந்த சூழலை பயன்படுத்தி சசிகலா அதிமுகவை காப்பாற்றுவேன் என்றும் தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் கூறி வருகிறார். மேலும் தொண்டர்களை சந்திப்பதற்காக சுற்றுப்பயணமும் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திருச்சி துவாக்குடி சுங்கச்சாவடியில் சசிகலா ஆதரவாளர்கள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
தஞ்சாவூர் செல்வதற்காக சுங்கச்சாவடி வழியே சசிகலா கார் சென்றுள்ளது. அப்போது கார் மீது சுங்க சாவடி ஸ்கேன் கட்டை விழுந்ததால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரின் ஆதரவாளர்கள் இது திட்டமிட்டு நடத்தப்பட்டது என இரவு 11:45 மணி முதல் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.