சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்தியது ஓ.பன்னீர்செல்வம் தான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா அவரை சார்ந்தவர்களுக்கு தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்று ஓபிஎஸ் கூறினார். சசிகலா அவரை சார்ந்தவர்களை எதிர்த்துதான் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். ஓபிஎஸ் பெட்டியை முழுமையாக பார்த்துவிட்டு நான் விளக்கம் அளிக்கிறேன்.
சசிகலாவுக்கு ஆதரவாக யார் செயல்பட்டாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கபடும் என ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கையெழுத்திட்டுள்ளார்கள். அதிமுகவில் சசிகலாவை சேர்க்கவே கூடாது என்று கூறியவர் ஓபிஎஸ் தான் என்று கூறினார். முன்னதாக அதிமுகவில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கண்ணியத்தோடு பேச வேண்டும் என்று ஓபிஎஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.