சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா நேற்று விடுதலை ஆன நிலையில் அவருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் நான்கு ஆண்டுகள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, நேற்று விடுதலை செய்யப்பட்டார். அவரின் விடுதலை தமிழக அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் பொதுவாக விடுதலையாகும் ஒருவருக்கு விடுதலை சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும்.
ஆனால் நேற்று சசிகலா விடுதலையானபோது சிறைத்துறை அதிகாரிகள் அவரிடம் விடுதலை சான்றிதழையும் அமலாக்கத் துறை நோட்டீஸையும் வழங்கியுள்ளனர். கடந்த ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்து சொத்துக்கள் முடக்கப்பட்டன. அது தொடர்பாக அமலாக்கத்துறை கடிதங்களுக்கு சசிகலா பதிலளிக்க தவறிய நிலையில் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.