Categories
அரசியல் மாநில செய்திகள்

‘சசிகலாவின் எண்ணம் நிறைவேறாது’…. கே.பி.முனுசாமி பேட்டி …..!!!!

சசிகலா அதிமுக தொண்டர்களுடன் செல்போனில் பேசும் ஆடியோக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அது சமூக வலைத்தளங்களில் வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சசிகலாவின் பேச்சுக்கு அதிமுக தொண்டர்கள் ஒருவர்கூட செவிசாய்க்க மாட்டார்கள். சசிகலா தொண்டர்களை திசைதிருப்பி குழப்ப முயற்சி செய்கிறார். மேலும் ஒன்றரை கோடி அதிமுக தொண்டரும் பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் அதிமுக நிர்வாகிகளும் கட்டிக்காத்து இந்த இயக்கத்தை பாதுகாத்து வருகிறார்கள்.

இந்த இயக்கத்தை ஏதாவது ஒரு வகையில் திசை திருப்பி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்யும் சசிகலா எண்ணம் ஈடேறாது சசிகலாவிடம் எந்த ஒரு அதிமுக தொண்டரும் பேசவில்லை. மாறாக சசிகலாதான் தொண்டர்களை தொடர்பு கொண்டு பேசி வருகிறார். அவரது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |