Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சங்கிலி பறிப்பவர்களை பிடிக்கனும்…. பைக்கை நிறுத்தி… அதிரடி சோதனையில் இறங்கிய போலீசார்..!!

திருச்சி மாநகராட்சியில்  பல்வேறு இடங்களில் காவல்துறையினர் வாகன சோதனை மேற்கொண்டனர்.

திருச்சி மாநகராட்சி பகுதியில் சங்கிலி பறிப்பு சம்பவம் அதிகமாக நடைபெறுகிறது. இந்த சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்க  மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக மாநகராட்சி முழுவதும்  போலீஸ் உதவி கமிஷனர்கள்  தலைமையில் காவல்துறையினர் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார்கள்.

அதைப்போல திருச்சி மத்திய பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில் போலீஸ் உதவி கமிஷனர் அஜய் தங்கம் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது  அந்த வழியாக பைக்கில் வந்த நபர்களை நிறுத்தி இன்சூரன்ஸ், ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு எண் சரியாக இருக்கின்றதா என்று சரிபார்த்து ஆய்வு மேற்கொண்டனர்.

Categories

Tech |