நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது .இந்நிலையில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வீரவணக்கம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தேற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி மலைக்கோட்டையில் முதல் முறையாக தேசியக்கொடி ஏற்றப்பட உள்ளது. இதற்காக கொடிக்கம்பம் நடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.