எஸ்ஏசி அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றிய போது நடந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
விஜயின் அப்பாவும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றார். அதில் யார் இந்த எஸ்ஏசி என்ற தலைப்பில் தான் கடந்து வந்த வாழ்க்கைப் பாதை பற்றி கூறி வருகின்றார். தற்போது அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது, அசிங்கப்படலனா வாழ்க்கையில் மேலே வரமுடியாது. கருப்பாக இருக்கிறாரே இவர் எப்படி நடிகனாக முடியும் என்று கேட்டார்கள். ஆனால் அவரே பின்னாளில் சூப்பர் ஸ்டார் ஆனார். சிவாஜியை உன் முகத்தை கண்ணாடியில் பார்த்திருக்கிறாயா என கேட்டார்கள்.
அவரே பிற்காலத்தில் நடிப்பு பல்கலைக்கழகமானார். அவர்களுடன் என்னை ஒப்பிட முடியாது. அவர்கள் இமயமலை என்றால் நான் ஒரு திரிசூலம் மலை. நான் தங்கச்சிமடத்தில் தான் பிறந்தேன். எனது அப்பா ரயில்வே அதிகாரி, என் அம்மா டீச்சர். எனக்கு ஒரு தங்கச்சி இரண்டு அண்ணன்கள் இருக்கின்றார்கள். அவங்க நல்லா படிச்சாங்க. ஆனா எனக்கு 12 வயசுல இருந்து சினிமா கனவுதான். நான் எம்ஜிஆர் சிவாஜி எல்லாம் பார்ப்பேன்னு நினைக்கல. அமிதாப்பச்சன் என்னுடைய படத்தில் நடிப்பார் என்று நினைச்சுக்கூட பாக்கல.
பிடிவாதமாக இருந்து நினைத்ததை செஞ்சுருக்கேன். நம்பிக்கை, பிடிவாதம், முயற்சி, உழைப்பு மனுஷனுக்கு இருக்கணும். வரட்டுப் பிடிவாதம் இல்லை, பிடிவாதம் செய்யணும் நெனச்சேன். நான் அசிஸ்டன்ட் டைரக்டரா இருந்தபோது ஒரு அசிஸ்டன்ட் டைரக்டரிடம் டவுட் கேட்டேன். அவர் என்னை கன்னத்தில் அறைந்தார். மற்றொருவர் எதற்கென்று தெரியல ஹோட்டல்ல தட்டு கழுவு என்றார். நானும் ஓட்டலில் தட்டு கழுவினேன். ஒரு நாள் உன்னை விட பெரிய இடத்துக்கு வருவேன் என்ற வைராக்கியத்துடன் பிடிவாதமாக இருந்த நான் இந்த நிலைமைக்கு வந்தேன். காரணம் அந்த பிடிவாதம்தான் பிடிவாதமாக இருப்பது தவறில்லை என அவர் கூறியுள்ளார்.