இலங்கையில் போலீஸ் ஒருவர் விடுமுறையை தர மறுத்த காவல்துறை அதிகாரியின் மீது ஆத்திரத்தில் சரமாரியாக துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.
இலங்கையில் திருக்கோயில் என்னும் பகுதி உள்ளது. இந்த பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் பணி புரியும் போலீஸ் ஒருவர் தனது மேலதிகாரியிடம் விடுமுறை கேட்டுள்ளார். ஆனால் அந்த மேலதிகாரி அவருக்கு விடுமுறை கொடுக்க மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் மேலதிகாரியை தனது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு வீழ்த்தியுள்ளார். இந்த கொடூர சம்பவத்தில் 4 காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்ததோடு 3 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். இதனையடுத்து துப்பாக்கி சூடு நடத்திய போலீஸ் மற்றொரு காவல் நிலையத்தில் சென்று சரணடைந்துள்ளார்.