Categories
தேசிய செய்திகள்

சக்கர நாற்காலி அரசாங்கம் வேண்டாம்… அது செயல்படாது… மம்தா பேனர்ஜி சீண்டும் பாஜக மாநிலத் தலைவர்..!!

சக்கர நாற்காலி அரசாங்கம் எப்போதும் வேலை செய்யாது என்று பாஜக மாநில தலைவர் திலிப் கோஷ் கூறியுள்ளார்.

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை பாஜக மாநில தலைவர் திலீப் கோஷ் விமர்சனம் செய்துள்ளார்.  அவர் (மம்தா பானர்ஜி) என்னிடம் கேளுங்கள். தற்போது நீதியை தள்ள முயற்சிகள் நடக்கிறது என்கிறார். நாம் இப்போது சக்கர நாற்காலி அரசை பார்க்கிறோம். இந்த சக்கர நாற்காலி அரசாங்கம் எந்த பணியையும் செய்யவில்லை. நாங்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறோம்.

பிரதமர் மோடியின் முகத்தை மேற்கு வங்க மக்கள் பார்க்க விரும்பவில்லை என்ற மம்தா பானர்ஜி கருத்துக்கும் அவர் பதிலளித்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் முகத்தை காண மக்கள் திரண்டு வருகின்றனர். உண்மையில் அவர்கள் மம்தா பானர்ஜியின் முகத்தைப் பார்க்க வரவில்லை. அதனால்தான் அவர் கால்களை காட்டுகிறார்.

மேற்குவங்க சட்டப்பேரவைக்கு எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தல் மார்ச் 27ஆம் தேதியும், நிறைவு கட்ட தேர்தல் ஏப்ரல் 29ம் தேதியும் நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்படுகின்றன.

Categories

Tech |