சக்கரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக சரக்கு ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.
கேரள மாநிலத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ஒரு சரக்கு ரயில் கிளம்பியது. இந்த சரக்கு ரயிலில் பெட்ரோல் மற்றும் டீசல் இருந்தது. இதில் 87 வேகன்கள் இருந்தது. இந்த ரயில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வந்தது. அப்போது திடீரென சக்கரங்கள் பழுதாகியது. இதனால் சக்கரங்களில் இருந்து தீப்பொறி பறந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர் ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்ததால் உடனடியாக அவர் ரயிலை நிறுத்தினார்.
இது குறித்து ரயில்வே காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பழுதாகி நின்ற சக்கரத்தை ஓட்டுனர் ஆய்வு செய்த போது அதில் பிரேக் பழுதாகி இருப்பது தெரிய வந்தது. இந்த பழுதான சக்கரத்தை ஓட்டுனரும், ஊழியரும் சேர்ந்தே சரி செய்தனர். மேலும் சக்கரங்களில் இருந்த பழுதுகள் நீக்கப்பட்டதா என்பதை உறுதி செய்த பிறகு அங்கிருந்து ரயில் கிளம்பியது.